Tuesday, November 23, 2010

பிரியா விடைசிறகு முளைத்த
வன்னத்துப்பூச்சுகள்
விடை பெறுகின்றன
பிரியாவிடையுடன்

உள்ளங்களில்
உண்மை வலிகளுடனும்
கண்களிலே
கண்ணீர்த் துளிகளுடனும்

வாங்கிய தண்டனைகளை
மறந்து
வாங்கச் சென்றன
ஆசிரியர்களிடம்
ஆசிர்வாதம்

எமது ஆட்டோகிராப் களில்
தமது எழுத்துக்களும்
ஜொலிக்க வேண்டுமென
பறந்து திரிந்தன
மின்மினிப் பூச்சிகள்

பிரிந்திடும் நேரத்திலும்
பலரது கண்கள்
பழகியதை தேடி
தோற்றுப்போயின

ஒன்றாய் கூடிக்
கும்மியடித்த
அத்திமரத்தடி,
திருட்டுத் தனமாய்
பிடுங்கித் தின்ற
மாம்பலம்,
சிறிய எல்லை வைத்து
கிரிகட் விளையாடிய
மைதான மத்தியில்
உள்ள பெயர் தெரியா
உயர்ந்த மரத்தடி

இவை
அனைத்தையும்
சூடு போட்டாலும்
மறக்க முடியுமா
மாண்புமிகு உறவுகளே.

Tuesday, June 22, 2010

உயிரானவளே!!!

என்
எண்ணக்கீரல்களில்
கிருக்கப்படும்
உருவம்
நீ

என்
சிந்தனைச்
சிதரல்களில்
சிறகடிக்கும்
சிட்டுக்குருவி
நீ

என்
நெஞ்சக் குளத்தில்
குதித்து விளையாடும்
செல்ல மீன்குட்டி
நீ

என்
இதயத்தின்
புற்தரைகளில்
துள்ளி விளையாடும்
புள்ளி மான் குட்டி
நீ

என்
உள்ளம்
கொள்ளை போகும்
எழில் மிகு
உயிரோவியம்
நீ

என்
கண்களை
சொக்கவைக்கும்
எழில் கொஞ்சும்
இயற்கை அருவி
நீ

என்
இதயச்சுவர்களில்
புகைப்படமாய்
வடிக்கப்பட்டுள்ள
சித்திரம்
நீ

உன்
ஓரப்பார்வையால்
தினமும்
ஒரு கோடிப்
பூக்கள் மலரும்
என் இதயத்தில்

உன்
குளிவிலும் சிரிப்பு
அதுதான் என்
நாடித்துடிப்பு.

இளநெஞ்சன்
ரமீஸ்

Thursday, June 10, 2010

கனவில் வந்த தேவதை.

என்
இருண்ட விழிகள்
அவள் பிரகாசமான
முகத்தைக்
கண்ட மறுகணமே
மருண்டு நின்றன

தேவலோகப்
பெண்ணொருத்தி
இடம் மாறி வந்த
தென நினைத்தது
என் உள்ளம்

என் விழிகள் பார்த்தது
நிஜம் தானா
என உறுதிப்படுத்த
முயன்றன
என் கைகள்

அவள் குரலை
உள்வாங்கிய
காதுகளோ
வேறு குரலை
உள்வாங்க மறுத்தன

அவள் பாதம்பட்ட
சிறு கற்களை
மரியாதையாகத்
தொட்டன
என் கால்கள்

முயற்சியில்
தோல்வியுற்ற
கைகளோ
அவள் பாதம் பட்ட
சிறு கற்களை
பக்குவப் படுத்தின

அவள் கருங்கூந்தளைப்
பார்த்தேன்
இரவு அதன் திரைகளை
அவள் தலையில்
தொங்க விட்டதுவோ?
என நினைத்தேன்.

என் நெஞ்சக்
குளத்தின்
கரைகலெங்கும்
அவள் நினைவலைகள்
பரவலாக
மோதுகின்றன

பெண்ணே
இத்தனையும்
நிகழ்ந்தது வெறும்
கனவில் தான்

கனவில் வந்த
தேவதையே
நீ நனவில் வருவது
சாத்தியமா??
உன்னைத் தேடி
ஒரு இதயம்
அலைந்து திரியுது
பைத்தியமாய்.

இளநெஞ்சன்
ரமீஸ்

Wednesday, June 9, 2010

பொறாமையால் சீரழிந்த ஒரு ஹாஸ்டல் நட்பு.

ஆருயிர் நண்பனே
எனைக் குற்றுயிராய்
ஆக்கியதன் நோக்கம்
என்னவோ?

நாம் இங்கு
தனிமையில்
நடந்ததை விட
இருவரும்
கை கோர்த்து
வளம் வந்ததுதான்
அதிகம்

நம் நட்பைப்
பற்றி ஒவ்வொரு
கட்டிடத்துக்கும்,
மரங்களுக்கும்,
ஏன் செடிகளுக்கும்
கூடத் தெரிந்திருந்தது

நம் நட்பைக்
கண்ட
பறவைகள் கூட
எங்களை வாழ்த்திச்
சென்றன

இறைவனுக்காய்
நம் நட்பைப்
பரஸ்பரம் பகிந்து
கொண்டதால்
நம் நட்பு
தூய்மையானது

இதனால்
பல தடைகளையும்
தாண்டி
வெற்றி நடை
போட்டது
நம் நட்பு

இவ்வாறு
நம் நட்பை
பல ஆண்டுகள்
பரஸ்பரம் பகிர்ந்து
கொண்டோம்

பல வருடம்
தொடர்ந்த பின்னும்
பொறாமையின்
காரணத்தால்
சிதைந்துபோனது
சில நொடியில்

நம் நட்பு
தூய்மையானதால்
பிரிவென்ற சொல்
நமக்கு
நிரந்தரமில்லை

ஓஹ் என்
இனிய நண்பனே!
என் இதயத்தில்
புதைந்திருக்கும்
துக்கங்கள் நீங்கவே
ஒரு நிமிடம் என்னுடன்
மனம் விட்டுப் பேசடா

காலத்தால்
அழியாத
நம் நட்பின்
சுவடுகள்
என்றென்றும்
என் இதயத்தின்
அரியாசனத்தில்
அமர்ந்திருக்கும்.

இளநெஞ்சன்
ரமீஸ்

Tuesday, May 25, 2010

என் தேவதைஅன்பே
உன் போல் அழகு
இவ்வையகத்தில்
இல்லை
என் கண்களுக்கு

உனைக் கண்ட
மறுகணமே
அந்த நிலா
அழகில்லை
எனத் தோன்றியது

உன்
கருங்கூந்தல்
பார்த்தேன்
அன்று முதல்
நான் இரவின்
ரசிகன்

இரவானால்
உன் நினைவு
என் கண்களை
தட்டித் திறக்கிறது

மறு நாள்
காலையில்
தனிமைப்பட்டவனாய்
கண் விழிக்கிறேன்

ஒவ்வொரு
சூர்யோதயமும்
உன்னை நினைக்க
வைக்கிறது

தேனீக்கள்
உன் இதழ்களைச்
சுற்றி
வட்டமிடுகின்றன

காற்று
உன் ஜன்னலோடு
அளவிலாப்
பிரியம் கொண்டது

உன் பாதணியோ
உன்னை
சுமப்பதில்
பெருமைப்பட்டது

சூரியனோ
உன் வெளிச்சம்
தாங்காமல்
மேகத்துக்குள்
மறைந்து
கொண்டது

உன் கண்களைக்
கண்ட
நட்சத்திரங்களோ
இடைவிடாது
கண்ணடித்தன

உன் வட்ட
முகம் கண்ட
சந்திரனோ
தன் உறவுகள்
பூமியில் இருப்பதாய்
சந்தோசம் கொண்டது

உனை சுவாசித்த
காற்றோ
உன் வாசனையை
பூக்களுக்கு
பகிர்ந்தளித்தது

உன்
கன்னத்தில்
உள்ள
நீர்த்துளிகள்
மாதுளம்
பூவில் உள்ள
தேன் துளிகள்


நன்
தினமும்
மழையை
ரசிக்கிறேன்
ஏனென்றால் அது
உன் கார்மேகக்
கூந்தலில் இருந்து
சொட்டும்நீர்த் துளிகள்

உன் தரிசனத்தின்
பின் எனை
என் நண்பர்கள்
"ஆம்ஸ்ட்ரோங்"
என்றல்லவா
அழைக்கிறார்கள்.

என் கண்களுக்கு
விருந்தளிக்கும்
உன் கள்ளப்
பார்வையைக்
காணத் தினமும்
என் வாசலில்
தவம் கிடக்கிறேன்.

இளநெஞ்சன்
ரமீஸ்இதய சங்கமம்.என் இதயம் கவர்ந்தவளே

என் நினைப்பை பரித்தவளே

நீ இருக்கும் திசை தேடி

என் கண்கள் அலைகிறதே


பூ இருக்கும் இடம் தேடி

வண்டுகளும் செல்வது போல்
நீ இருக்கும் இடம் நோக்கி

என் உள்ளம் செல்கிறதே


நான்கு கண்கள் சந்திக்க

இதழ்கள் இரண்டும் மெளனிக்க

இதயம் இரண்டும் சிறகடித்து

இடம் மாறியது தாமாகவே


என் மனதில் உள்ளவற்றை

உன்னிடத்தில் கொட்டிவிட்டேன்

இரு நொடிகள் செல்வதற்குள்

உன் இதயம் தந்து விட்டாய்


உன் மனதை ஆளுகிறேன்

உன் நினைவில் வாடுகிறேன்

உன் மடியில் முகம் புதைக்கும்
நாள் எண்ணி ஏங்குகிறேன்


அன்புக்கு அன்னையாகவும்

அரவணைப்புக்கு தாரமாகவும்

அறிவுக்கு ஆசானாகவும்

உதவிக்கு உற்ற தோழியாகவும்

என்றென்றும் நீ இருப்பாய்
என்
எதிர்காலப் பூங்கொடியே.

இளநெஞ்சன்
ரமீஸ்அமாவாசையான பெளர்ணமி.

அது ஒரு

விடுமுறை நாள்
இறைவனின்
சக்திக்கு முன்னாள்
நம் சக்தி
வெறும் தூசென்று
புரிய வைத்த நாள்.

தன் எல்லை கடந்த
ஆக்கிரமிப்பில்
கடல் அன்னை
ஈடுபட்ட நாள்

எப்பக்கம்
பார்த்தாலும்
மரண ஓலங்கள்

இறைவனை
மறந்தோர் பலரும்
அன்று அவனை
ஞபகப்படுத்திய நாள்

யாருக்கு யார்
அனுதாபம்
தெரிவிப்பதென்று
தெரியாது

தன் எதிரியின்
மரணத்தில் கூட
மானிடர்கள்
கண்களும்
குளமாயின

அன்றைய நாள்
ஜாதி பேதம்,
குள பேதம்,
மத பேதம்
எல்லாமே எங்கோ
காணாமல் போயின

ஊடகங்களும்
தன் பங்குக்கு
சோகத்தில்
பங்கு பற்றின
அந்நாளில்

தேசம் தாண்டிய
உறவுகளும்
தம் பாசக் கரம்
நீட்டினர்
நம் பக்கம்

கொடி கட்டிப்
பரந்த
செல்வந்தரெல்லாம்
நொடிப்பொழுதில்
அகதி ஆயினர்

இதயமே இல்லாத
சில மனிதர்களும்
அன்று தம்
கை வரிசைகளைக்
காட்டினர்

அன்று
இடிக்கப்பட்டது
கட்டிடக் கோட்டைகள்
மட்டுமல்ல
மானுடனின்
கற்பனைக் கோட்டைகளும்
சேர்ந்துதான்

மத பேதம்
இன பேதமின்றி
மக்கள் சோகத்தில்
திளைத்தனர்

மனிதரின்
தூக்க நேரத்தை
துக்க நேரமாகவும்
ஏக்க நேரமாகவும்
மாற்றியது
அந்நாள்

பெற்றோர்
குழந்தைகளையும்,
குழந்தைகள்
பெற்றோரையும்
தேடித் திளைத்த
நாள் அது

பள்ளிக் கூடங்கள்
யாவும் பாடத்திலிருந்து
விடுமுறை பெற்று
அகதி முகாம்களாய்
மாறின

நட்சத்திரங்கள் கூட
அன்று தன்
சோகத்தைக்
காட்டுமுகமாக
எங்கோ சென்று
ஒளிந்து கொண்டன

அந்தப் பெளர்ணமி
தினத்திலும் கூட
மானிடர்களின் உள்ளம்
அமாவாசையாகத் தான்
இருண்டிருந்தது

அடுத்த நாள்
பத்திரிகைகளில்
"சுனாமி" என்பது தான்
தலைப்புச் செய்தி.

இளநெஞ்சன்
ரமீஸ்

ஒருதலைக் காதலனின் ஏக்கம்.இதயக் கதவை மெதுவாகத் தட்டினேன்

இறுக்கமாக மூடிக் கொண்டாய்

இடை விடாது தட்டினேன்

இடையூறு தருவதாக

இன்ஸ்பெக்டரிடம் சொல்லிவிட்டாய்


பாடசாலை நேரங்களெல்லாம்

பாடங்களைக் கட்டடித்து

பருவ மங்கை உனைக்கான

பதுங்கி அலைந்தேன்

பாசத்துடன்


அந்தி மாலை நேரங்களில்

அரசியல் பாட வகுப்பென்று

அம்மாவிடம் சொல்லிவிட்டு

அன்பே உனைத் தேடி வந்தேன்


இவ்வளவு செய்த பின்னும்

இதயம் சற்றும் இலக வில்லை

இன்னும் என்ன செய்ய வேண்டும்

இவனை சற்று நினைப்பதற்கு?


இளநெஞ்சன்
ரமீஸ்

உன் வாழ்க்கை உன் கையில்.

வாழ்க்கையின்
தத்துவத்தை
விளங்க வேண்டுமா?
உன் வாழ்க்கையை
முழுமையாக வாழ்ந்துபார்.

உன் வாழ்க்கையை
தூய நட்பின் மூலம்
அலங்கரித்துக் கொள்

துர் நடத்தைகளுக்கு
உன் வாழ்க்கையை
அடிமைப் படுத்தாதே

தீய
நண்பர்களைவிட்டும்
தூர விலகிச்செல்

உன் வாழ்க்கையை
நீ நேசி
உன் வாழ்க்கையும்
உன்னை நேசிக்கும்

வாழ்க்கை
கடலைவிட ஆழமானது
அதன் ஆழத்துக்குச்
சென்று பார், பல
அற்புதங்களைக்
காண்பாய்

உன் வாழ்க்கையை
ரசனை மிக்கதாக
மாற்றிக்கொள்

காரிருளுக்குள்
தொலைக்கக் கூடியதல்ல
உன்வாழ்க்கை
கைகளிலே வைத்துக்
கொண்டாடக்கூடியது

உன் வாழ்க்கையில்
தென்றல் மட்டுமல்ல
புயலும் வீசும்
சாய்ந்து விடாதே

உன் வாழ்க்கையை
ஒளிவிளக்காக்கிக்கொள்
ஏனையோரும்
ஒளி பெறட்டும்

உன் வாழ்க்கையை
ஒரு கலையாக
மாற்றிக்கொள்
பின்னோர்கள்
ரசிக்கட்டும்

வாழ்க்கையில்
பயத்தை
விட்டுவிடு
பகுத்தறிவோடு வாழ்
உலகம் உனக்காகக்
காத்திருக்கும்
என்றும் வெற்றி
உன் கையிலே.

இளநெஞ்சன்
ரமீஸ்

உனக்காய் எங்கும் உள்ளம்.

பெண்ணே!

உன் தலை முடி

உதிர்வதைக் கூட

என்னால் தாங்க

முடியாது

ஏனெனில் அது என்

உடம்பில் ஓடும்

நரம்புகள்

உதிர்வதைப் போல்

உள்ளது.


உன் கண்ணில் இருந்து

ஒரு துளி கண்ணீர் கூட

விளலாகாது

அது என்

இதயத்திலிருந்து வழியும்

இரத்தத் துளிகள்.


உன் குளிவிலும்

கன்னத்தின்

சிரிப்பைப் பார்க்க

எத்தனை வருடங்களேனும்

தவம் கிடப்பேன்.


இளநெஞ்சன்
ரமீஸ்

உழவன்.

கரும் சேற்று வயல் நிலத்தை
கலப்பை கொண்டு பதன் படுத்தி
கச்சிதமாய் வடிகால் வெட்டி
கழிவினையும் உதறித் தள்ளி

முதுமையிலும் முனைந்து நின்று
முத்து முத்தாய் நெல்லைத் தூவி
முளைக்கும் வரை காவல் நின்று
முளையிலையே கலை பிடுங்கி

விசக்கிருமியின் தீங்கில் நின்றும்
விளைந்தவற்றைக் காத்திடவே
வியர்வையையும் பாராமல்
வெய்யிலிலும் பசலையிட்டாய்

இரவு பகல் பாராத
இன்னல்களின் இறுதியிலே
இஷ்டத்துடன் எதிர்பார்த்த
இன்பக் கதிர் கைகளிலே

நீசேற்றில் கால் வைத்தால்
நாம் சோற்றில் கை வைப்போம்
உன் சேற்றுக் கால்களுக்கு
உயிருள்ள வரை நன்றி .


இளநெஞ்சன்
ரமீஸ்

மழை நாள் .

வானவனால் விண்ணிலிருந்து

மண்ணுக்கு வரையப்பட்ட

இடைவிடா இறக்கக் கோடுகள்

சில வேளைகளில் அது

தண்டனைக் கோடுகள்.


விவசாயிகள் புகழ்ந்துனிக்க

வியாபாரிகள் இகழ்ந்துனிக்க

சிறியோர்கள் குதூகலித்து

விளையாடினர் மழை நீரில்


சோ வென்ற மழை கண்ட

ஏழையின் வீட்டுக் கூரை

ஹோ வென்று அழுத்தப்பா

தன் நூறு கண்களினால்


வீதியெங்கும் சில மக்கள்

பல வர்ணக் குடைகளுடன்

தடுமாறி நின்றனரே

தான் ஒதுங்க இடம் தேடி


மீனுன்ன வெண் கொக்கு

ஆறான வயல் வெளியில்

ஓயாமல் அலைகிறதே

ஒய்யாரப் பார்வையோடு.


இளநெஞ்சன்
ரமீஸ்

துணையின் பிரிவு..

கருவில் இருந்து இன்று வரைக்கும்

கவலை மறந்து ஒன்றாய் பறந்தோம்

சிறு வயதினில் வயல் வெளிகளில்
சிறகடித்து நாம் திரிந்தோம்.

பூந்தோட்டம் மலைகளெங்கும்
பூப்போலே நாம் அலைந்தோம்
காடு, ஓடை குளங்கலெல்லாம்
காட்டாறாய் நாம் புரண்டோம்

இத்தனையும் என் வாழ்வில்

இனி நடப்பது வெறும் கனவே

ஏனென்றால் இன்று முதல்

ஏகன் வசமுன் உயிருள்ளது


விதி எந்தன் வாழ்க்கையிலே

விளையாடித் தீர்த்ததுவே

மதிநுட்பம் உள்ளவரும்

மலைத்துப் போய் நிற்பார்கள்.

இளநெஞ்சன்
ரமீஸ்

மனவரட்சி

என் மனம்

உன்னிடம்

எதோ ஒன்றை

எதிர் பார்க்கிறது

என்னால் அதனை

உணர்த்த முடியவில்லை

உன்னால் அதனை

உணர முடியவில்லை.


இதயம்.

உன் நினைவுகளை
ஒன்றாக்கி
செதுக்கப்பட்ட
கல்வெட்டு.

கண்மணி...........

உன் முகத்தை

பார்க்கும் போது

மின்மினிகள்

கண் சிமிட்டும்!


நிலா உன் நகத்தில்

முகம் பார்க்கும்!


பூக்கள் உன் கூந்தலில்

சூடிட அவாக் கொள்ளும்!


மின்னல் உன் வதனத்தை

அடிக்கடி படம் பிடிக்கும்!


நட்ச்ச்சத்திரங்களின் பிரகாசம்

உன் புன்னகைக்கு முன்னாள்

தோற்றுப் போகும்!


ஓ........... கண்மணி

உன் ஜன்னல் கம்பிகளில்

இவன் விழிகள்

எனதாசைகள் முடக்கப்பட்ட நொடி....

தந்தை என்ற சொல்லுக்கொரு

தக்க விளக்கமாய் அக்கறையோடு

எம்மை வளர்ப்பீர் பேரன்போடு

உலகத்தில் நான் வாழ பண்போடு


வாழ்க்கை முறையை கற்றுத் தருவீர்

வளமான வாழ்வில் என் கால் பதிப்பீர்

தாழ்வும் உயர்வும் வாழ்வென சொல்வீர்

சிறப்பான வாழ்வின் முன்னோடி ஆவீர்


என்றெல்லாம் எதிர் பார்த்தேன் - அன்று

முதல் கால் நிலம் பதித்து நின்றேன்

ஆனாலும் மறு கணமே என் செவியில்

"குளந்தாய் உன் தந்தை இறந்து விட்டார்".


அன்று முதல் முடக்கப்பட்டது எனதாசை

நான் ஏது வித்தியாசமாய் அசை கொண்டேன்?

ஏனையோரின் ஆசை போன்று நானும் கொண்டேன்

எனதாசை ஏன் என் மேல் வஞ்சம் கொண்டது?


இருந்த போதும் என் பிராத்தனையில் தந்தையே!!

உனக்கு சுவனம் கிடைப்பதற்காய் வேண்டுகிறேன்

அங்காவது உன்னுடன் நான் வாழ ஏங்குகிறேன்

ஏற்றுக்கொள்வாய் என் பிராத்தனையை இறைவனே!!


சிறந்தவனாய்....

கரும்பாரையின் உறுதி பெற்று
கற்றபடி செயல் நடந்து
சவால்களை வென்றிடுவோம்
சாத்தானை விரட்டிடுவோம்.

தீயோரின் தீங்குகளை
அடியோடு அழித்திடுவோம்
வானவனின் சொற்படி நாம்
அனைவருமே நடந்திடுவோம்

ஏழைகளின் சிரிப்பினில் தான்
சுவர்க்கமது இருக்கிறதாம்
ஏழைகளுக் குதவி செய்து
நம் நலனைக் கூட்டிடுவோம்

டைட்டானிக் கப்பல்
நான் உன்னை

முதன் முதலில் பார்த்தது

தனியார் பஸ்ஸில்

அந்நேரம் எனக்கு அது

பஸ்ஸல்ல

டைட்டானிக் கப்பல்