Thursday, June 10, 2010

கனவில் வந்த தேவதை.

என்
இருண்ட விழிகள்
அவள் பிரகாசமான
முகத்தைக்
கண்ட மறுகணமே
மருண்டு நின்றன

தேவலோகப்
பெண்ணொருத்தி
இடம் மாறி வந்த
தென நினைத்தது
என் உள்ளம்

என் விழிகள் பார்த்தது
நிஜம் தானா
என உறுதிப்படுத்த
முயன்றன
என் கைகள்

அவள் குரலை
உள்வாங்கிய
காதுகளோ
வேறு குரலை
உள்வாங்க மறுத்தன

அவள் பாதம்பட்ட
சிறு கற்களை
மரியாதையாகத்
தொட்டன
என் கால்கள்

முயற்சியில்
தோல்வியுற்ற
கைகளோ
அவள் பாதம் பட்ட
சிறு கற்களை
பக்குவப் படுத்தின

அவள் கருங்கூந்தளைப்
பார்த்தேன்
இரவு அதன் திரைகளை
அவள் தலையில்
தொங்க விட்டதுவோ?
என நினைத்தேன்.

என் நெஞ்சக்
குளத்தின்
கரைகலெங்கும்
அவள் நினைவலைகள்
பரவலாக
மோதுகின்றன

பெண்ணே
இத்தனையும்
நிகழ்ந்தது வெறும்
கனவில் தான்

கனவில் வந்த
தேவதையே
நீ நனவில் வருவது
சாத்தியமா??
உன்னைத் தேடி
ஒரு இதயம்
அலைந்து திரியுது
பைத்தியமாய்.

இளநெஞ்சன்
ரமீஸ்

No comments:

Post a Comment