Tuesday, May 25, 2010

உழவன்.

















கரும் சேற்று வயல் நிலத்தை
கலப்பை கொண்டு பதன் படுத்தி
கச்சிதமாய் வடிகால் வெட்டி
கழிவினையும் உதறித் தள்ளி

முதுமையிலும் முனைந்து நின்று
முத்து முத்தாய் நெல்லைத் தூவி
முளைக்கும் வரை காவல் நின்று
முளையிலையே கலை பிடுங்கி

விசக்கிருமியின் தீங்கில் நின்றும்
விளைந்தவற்றைக் காத்திடவே
வியர்வையையும் பாராமல்
வெய்யிலிலும் பசலையிட்டாய்

இரவு பகல் பாராத
இன்னல்களின் இறுதியிலே
இஷ்டத்துடன் எதிர்பார்த்த
இன்பக் கதிர் கைகளிலே

நீசேற்றில் கால் வைத்தால்
நாம் சோற்றில் கை வைப்போம்
உன் சேற்றுக் கால்களுக்கு
உயிருள்ள வரை நன்றி .


இளநெஞ்சன்
ரமீஸ்

No comments:

Post a Comment