Tuesday, May 25, 2010

அமாவாசையான பெளர்ணமி.

















அது ஒரு

விடுமுறை நாள்
இறைவனின்
சக்திக்கு முன்னாள்
நம் சக்தி
வெறும் தூசென்று
புரிய வைத்த நாள்.

தன் எல்லை கடந்த
ஆக்கிரமிப்பில்
கடல் அன்னை
ஈடுபட்ட நாள்

எப்பக்கம்
பார்த்தாலும்
மரண ஓலங்கள்

இறைவனை
மறந்தோர் பலரும்
அன்று அவனை
ஞபகப்படுத்திய நாள்

யாருக்கு யார்
அனுதாபம்
தெரிவிப்பதென்று
தெரியாது

தன் எதிரியின்
மரணத்தில் கூட
மானிடர்கள்
கண்களும்
குளமாயின

அன்றைய நாள்
ஜாதி பேதம்,
குள பேதம்,
மத பேதம்
எல்லாமே எங்கோ
காணாமல் போயின

ஊடகங்களும்
தன் பங்குக்கு
சோகத்தில்
பங்கு பற்றின
அந்நாளில்

தேசம் தாண்டிய
உறவுகளும்
தம் பாசக் கரம்
நீட்டினர்
நம் பக்கம்

கொடி கட்டிப்
பரந்த
செல்வந்தரெல்லாம்
நொடிப்பொழுதில்
அகதி ஆயினர்

இதயமே இல்லாத
சில மனிதர்களும்
அன்று தம்
கை வரிசைகளைக்
காட்டினர்

அன்று
இடிக்கப்பட்டது
கட்டிடக் கோட்டைகள்
மட்டுமல்ல
மானுடனின்
கற்பனைக் கோட்டைகளும்
சேர்ந்துதான்

மத பேதம்
இன பேதமின்றி
மக்கள் சோகத்தில்
திளைத்தனர்

மனிதரின்
தூக்க நேரத்தை
துக்க நேரமாகவும்
ஏக்க நேரமாகவும்
மாற்றியது
அந்நாள்

பெற்றோர்
குழந்தைகளையும்,
குழந்தைகள்
பெற்றோரையும்
தேடித் திளைத்த
நாள் அது

பள்ளிக் கூடங்கள்
யாவும் பாடத்திலிருந்து
விடுமுறை பெற்று
அகதி முகாம்களாய்
மாறின

நட்சத்திரங்கள் கூட
அன்று தன்
சோகத்தைக்
காட்டுமுகமாக
எங்கோ சென்று
ஒளிந்து கொண்டன

அந்தப் பெளர்ணமி
தினத்திலும் கூட
மானிடர்களின் உள்ளம்
அமாவாசையாகத் தான்
இருண்டிருந்தது

அடுத்த நாள்
பத்திரிகைகளில்
"சுனாமி" என்பது தான்
தலைப்புச் செய்தி.

இளநெஞ்சன்
ரமீஸ்

No comments:

Post a Comment