Tuesday, May 25, 2010

என் தேவதை



அன்பே
உன் போல் அழகு
இவ்வையகத்தில்
இல்லை
என் கண்களுக்கு

உனைக் கண்ட
மறுகணமே
அந்த நிலா
அழகில்லை
எனத் தோன்றியது

உன்
கருங்கூந்தல்
பார்த்தேன்
அன்று முதல்
நான் இரவின்
ரசிகன்

இரவானால்
உன் நினைவு
என் கண்களை
தட்டித் திறக்கிறது

மறு நாள்
காலையில்
தனிமைப்பட்டவனாய்
கண் விழிக்கிறேன்

ஒவ்வொரு
சூர்யோதயமும்
உன்னை நினைக்க
வைக்கிறது

தேனீக்கள்
உன் இதழ்களைச்
சுற்றி
வட்டமிடுகின்றன

காற்று
உன் ஜன்னலோடு
அளவிலாப்
பிரியம் கொண்டது

உன் பாதணியோ
உன்னை
சுமப்பதில்
பெருமைப்பட்டது

சூரியனோ
உன் வெளிச்சம்
தாங்காமல்
மேகத்துக்குள்
மறைந்து
கொண்டது

உன் கண்களைக்
கண்ட
நட்சத்திரங்களோ
இடைவிடாது
கண்ணடித்தன

உன் வட்ட
முகம் கண்ட
சந்திரனோ
தன் உறவுகள்
பூமியில் இருப்பதாய்
சந்தோசம் கொண்டது

உனை சுவாசித்த
காற்றோ
உன் வாசனையை
பூக்களுக்கு
பகிர்ந்தளித்தது

உன்
கன்னத்தில்
உள்ள
நீர்த்துளிகள்
மாதுளம்
பூவில் உள்ள
தேன் துளிகள்


நன்
தினமும்
மழையை
ரசிக்கிறேன்
ஏனென்றால் அது
உன் கார்மேகக்
கூந்தலில் இருந்து
சொட்டும்நீர்த் துளிகள்

உன் தரிசனத்தின்
பின் எனை
என் நண்பர்கள்
"ஆம்ஸ்ட்ரோங்"
என்றல்லவா
அழைக்கிறார்கள்.

என் கண்களுக்கு
விருந்தளிக்கும்
உன் கள்ளப்
பார்வையைக்
காணத் தினமும்
என் வாசலில்
தவம் கிடக்கிறேன்.

இளநெஞ்சன்
ரமீஸ்















1 comment:

  1. கவி மழையில் நனைந்தேன்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete