அது ஒரு காலம் அழகான காலம் அழகான கலமேன்றாலே அது பாடசாலை செல்லும் காலம் தானே! நம் வாழ்வில் என்றும் மீலாத காலம் நம் நினைவில் என்றும் அழியாத காலம் போகும் போது வெள்ளை நாரைகலாவோம் திரும்பும் போது சாம்பல் கொக்குகலாவோம் வஞ்சகமின்றி கட்டிப்புரண்டு சண்டையிடுவோம் காரியமின்றி அடுத்தகணமே கட்டியனைப்போம் இடைவேளையில் மாமரத்தில் கல்லடிப்போம் இடைக்கிடையே நகைச்சுவையாய் சொல்லடிப்போம் மைதான ஒதுக்குப் புறப் பகுதியிலே பெரிதாய் வளர்ந்த மரத்தடியினிலே சிறிதாய் எல்லைக் கோடுகள் அமைத்து கிரிக்கெட் மேட்ச் விளையாடிய காலமது.... நான்காம் ஆண்டில் படிக்கும் போது கொப்பித்தாளில் ரொக்கட் செய்து கூரையில் கூடாரமிட்ட புறா மீது குறிபார்த்து நான் தாக்கிய போது முட்டை விழுந்தது கீழே புறா பறந்தது மேலே நாற்றம் பரவியது வகுப்பறை உள்ளே திக் திக்கென்றது என் மனதினுள்ளே சுல்சுல்லென்றது ஆசிரியையின் பிரம்பு பதை பதைத்துப் போனது என் நாடி நரம்பு. வாழ்நாளில் இவ்வாழ்க்கை மறவாதது யாவர்க்கும் அவ்வாழ்க்கை இனிதானது நண்பர்கள் அனைவரையும் உறவாக்கியது நம் உள்ளத்தில் அறிவுதனைக் கருவாக்கியது எதிர் காலத் தலைவர்களை உருவாக்கியது
எமக்கு அறிவுப்பால் ஊட்டிய தாயே நீ மென்மேலும் வானுயர்ந்து உன் அறிவுக் குடையை விரித்திடுவாய் மடமை இருளை தடுத்திடுவாய்.....
உள்ளங்களில் உண்மை வலிகளுடனும் கண்களிலே கண்ணீர்த் துளிகளுடனும்
வாங்கிய தண்டனைகளை மறந்து வாங்கச் சென்றன ஆசிரியர்களிடம் ஆசிர்வாதம்
எமது ஆட்டோகிராப் களில் தமது எழுத்துக்களும் ஜொலிக்க வேண்டுமென பறந்து திரிந்தன மின்மினிப் பூச்சிகள்
பிரிந்திடும் நேரத்திலும் பலரது கண்கள் பழகியதை தேடி தோற்றுப்போயின
ஒன்றாய் கூடிக் கும்மியடித்த அத்திமரத்தடி, திருட்டுத் தனமாய் பிடுங்கித் தின்ற மாம்பலம், சிறிய எல்லை வைத்து கிரிகட் விளையாடிய மைதான மத்தியில் உள்ள பெயர் தெரியா உயர்ந்த மரத்தடி
இவை அனைத்தையும் சூடு போட்டாலும் மறக்க முடியுமா மாண்புமிகு உறவுகளே.
நான் இந்து சமுத்திரத்தின் நித்திலம் என வர்ணிக்கப்படும், கண்களுக்குக் குளிர்ச்சியான நீர் வீழ்ச்சிகளும், வயல்வெளிகளும் நிறைந்த இலங்கைத் தாயின் குருநாகல் மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டவன். தற்போது கொழும்பில் ஒரு Charitable Organization இல் வேலைசெய்கிறேன்.