![]() |
அது ஒரு காலம் அழகான காலம்
அழகான கலமேன்றாலே அது
பாடசாலை செல்லும் காலம் தானே!
நம் வாழ்வில் என்றும் மீலாத காலம்
நம் நினைவில் என்றும் அழியாத காலம்
போகும் போது வெள்ளை நாரைகலாவோம்
திரும்பும் போது சாம்பல் கொக்குகலாவோம்
வஞ்சகமின்றி கட்டிப்புரண்டு சண்டையிடுவோம்
காரியமின்றி அடுத்தகணமே கட்டியனைப்போம்
இடைவேளையில் மாமரத்தில் கல்லடிப்போம்
இடைக்கிடையே நகைச்சுவையாய் சொல்லடிப்போம்
மைதான ஒதுக்குப் புறப் பகுதியிலே
பெரிதாய் வளர்ந்த மரத்தடியினிலே
சிறிதாய் எல்லைக் கோடுகள் அமைத்து
கிரிக்கெட் மேட்ச் விளையாடிய காலமது....
நான்காம் ஆண்டில் படிக்கும் போது
கொப்பித்தாளில் ரொக்கட் செய்து
கூரையில் கூடாரமிட்ட புறா மீது
குறிபார்த்து நான் தாக்கிய போது
முட்டை விழுந்தது கீழே
புறா பறந்தது மேலே
நாற்றம் பரவியது வகுப்பறை உள்ளே
திக் திக்கென்றது என் மனதினுள்ளே
சுல்சுல்லென்றது ஆசிரியையின் பிரம்பு
பதை பதைத்துப் போனது என் நாடி நரம்பு.
வாழ்நாளில் இவ்வாழ்க்கை மறவாதது
யாவர்க்கும் அவ்வாழ்க்கை இனிதானது
நண்பர்கள் அனைவரையும் உறவாக்கியது
நம் உள்ளத்தில் அறிவுதனைக் கருவாக்கியது
எதிர் காலத் தலைவர்களை உருவாக்கியது
எமக்கு அறிவுப்பால் ஊட்டிய தாயே
நீ மென்மேலும் வானுயர்ந்து உன்
அறிவுக் குடையை விரித்திடுவாய்
மடமை இருளை தடுத்திடுவாய்.....