Wednesday, April 27, 2016

பாடசாலை நாட்கள்..



அது ஒரு காலம் அழகான காலம் 
அழகான கலமேன்றாலே அது 
பாடசாலை செல்லும் காலம் தானே!
நம் வாழ்வில் என்றும்  மீலாத காலம் 
நம் நினைவில் என்றும் அழியாத காலம் 

போகும் போது வெள்ளை நாரைகலாவோம்
திரும்பும் போது சாம்பல் கொக்குகலாவோம் 
வஞ்சகமின்றி கட்டிப்புரண்டு சண்டையிடுவோம் 
காரியமின்றி அடுத்தகணமே கட்டியனைப்போம் 
இடைவேளையில் மாமரத்தில் கல்லடிப்போம்
இடைக்கிடையே நகைச்சுவையாய் சொல்லடிப்போம்

மைதான ஒதுக்குப் புறப் பகுதியிலே
பெரிதாய் வளர்ந்த மரத்தடியினிலே 
சிறிதாய் எல்லைக் கோடுகள் அமைத்து 
கிரிக்கெட் மேட்ச் விளையாடிய காலமது....

நான்காம் ஆண்டில் படிக்கும் போது 
கொப்பித்தாளில் ரொக்கட் செய்து
கூரையில் கூடாரமிட்ட புறா மீது 
குறிபார்த்து நான் தாக்கிய போது
முட்டை விழுந்தது கீழே 
புறா பறந்தது மேலே 
நாற்றம் பரவியது வகுப்பறை உள்ளே
திக் திக்கென்றது என் மனதினுள்ளே

சுல்சுல்லென்றது ஆசிரியையின் பிரம்பு 
பதை பதைத்துப் போனது என் நாடி நரம்பு.

வாழ்நாளில் இவ்வாழ்க்கை மறவாதது
யாவர்க்கும் அவ்வாழ்க்கை இனிதானது 
நண்பர்கள் அனைவரையும் உறவாக்கியது 
நம் உள்ளத்தில் அறிவுதனைக்  கருவாக்கியது
எதிர் காலத் தலைவர்களை  உருவாக்கியது

எமக்கு அறிவுப்பால் ஊட்டிய தாயே
நீ மென்மேலும் வானுயர்ந்து உன்
அறிவுக் குடையை விரித்திடுவாய்
மடமை இருளை தடுத்திடுவாய்..... 

Monday, November 28, 2011

சகோதரனுக்கு ஓர் உபதேசம்.

அதிகாலையில் விழித்திடு
இறை வேதத்தை ஓதிடு
பாடங்களைப் படித்திடு
என்றும் உள்ளத்தில் நிலைத்திடும்

சகோதரா! உன் மனதில்
நற்சிந்தனைகளை விதைத்து
சோம்பல் எனும் களைபிடுங்கி
என்றும் வெற்றியை அறுவடை செய்.

தோழர்கள் தடுமாறும் போடு கைகொடு
மனக் கஷ்டத்தின் பொது தோள்கொடு
தொல்விநேரும் பொது ஊக்கம் கொடு

கண்ட இடங்களில் அமர்ந்தபடி
வீணான விடயங்களைக் கதைத்து
அநியாயங்களை இளைத்து
நேரத்தை வீணடிக்காது
அறியாதவற்றை தேடிக் கற்றிடு.

உன் உடல் நலத்தை நாடு
சந்தர்ப்பப்படி ஓடி விளையாடு
நல்ல நபர்களைத் தேடு
வலக்கரத்தில் கிடைக்கட்டும் உன் ஏடு.

இளநெஞ்சன்

Tuesday, November 23, 2010

பிரியா விடை



சிறகு முளைத்த
வன்னத்துப்பூச்சுகள்
விடை பெறுகின்றன
பிரியாவிடையுடன்

உள்ளங்களில்
உண்மை வலிகளுடனும்
கண்களிலே
கண்ணீர்த் துளிகளுடனும்

வாங்கிய தண்டனைகளை
மறந்து
வாங்கச் சென்றன
ஆசிரியர்களிடம்
ஆசிர்வாதம்

எமது ஆட்டோகிராப் களில்
தமது எழுத்துக்களும்
ஜொலிக்க வேண்டுமென
பறந்து திரிந்தன
மின்மினிப் பூச்சிகள்

பிரிந்திடும் நேரத்திலும்
பலரது கண்கள்
பழகியதை தேடி
தோற்றுப்போயின

ஒன்றாய் கூடிக்
கும்மியடித்த
அத்திமரத்தடி,
திருட்டுத் தனமாய்
பிடுங்கித் தின்ற
மாம்பலம்,
சிறிய எல்லை வைத்து
கிரிகட் விளையாடிய
மைதான மத்தியில்
உள்ள பெயர் தெரியா
உயர்ந்த மரத்தடி

இவை
அனைத்தையும்
சூடு போட்டாலும்
மறக்க முடியுமா
மாண்புமிகு உறவுகளே.

Tuesday, June 22, 2010

உயிரானவளே!!!

என்
எண்ணக்கீரல்களில்
கிருக்கப்படும்
உருவம்
நீ

என்
சிந்தனைச்
சிதரல்களில்
சிறகடிக்கும்
சிட்டுக்குருவி
நீ

என்
நெஞ்சக் குளத்தில்
குதித்து விளையாடும்
செல்ல மீன்குட்டி
நீ

என்
இதயத்தின்
புற்தரைகளில்
துள்ளி விளையாடும்
புள்ளி மான் குட்டி
நீ

என்
உள்ளம்
கொள்ளை போகும்
எழில் மிகு
உயிரோவியம்
நீ

என்
கண்களை
சொக்கவைக்கும்
எழில் கொஞ்சும்
இயற்கை அருவி
நீ

என்
இதயச்சுவர்களில்
புகைப்படமாய்
வடிக்கப்பட்டுள்ள
சித்திரம்
நீ

உன்
ஓரப்பார்வையால்
தினமும்
ஒரு கோடிப்
பூக்கள் மலரும்
என் இதயத்தில்

உன்
குளிவிலும் சிரிப்பு
அதுதான் என்
நாடித்துடிப்பு.

இளநெஞ்சன்
ரமீஸ்

Thursday, June 10, 2010

கனவில் வந்த தேவதை.

என்
இருண்ட விழிகள்
அவள் பிரகாசமான
முகத்தைக்
கண்ட மறுகணமே
மருண்டு நின்றன

தேவலோகப்
பெண்ணொருத்தி
இடம் மாறி வந்த
தென நினைத்தது
என் உள்ளம்

என் விழிகள் பார்த்தது
நிஜம் தானா
என உறுதிப்படுத்த
முயன்றன
என் கைகள்

அவள் குரலை
உள்வாங்கிய
காதுகளோ
வேறு குரலை
உள்வாங்க மறுத்தன

அவள் பாதம்பட்ட
சிறு கற்களை
மரியாதையாகத்
தொட்டன
என் கால்கள்

முயற்சியில்
தோல்வியுற்ற
கைகளோ
அவள் பாதம் பட்ட
சிறு கற்களை
பக்குவப் படுத்தின

அவள் கருங்கூந்தளைப்
பார்த்தேன்
இரவு அதன் திரைகளை
அவள் தலையில்
தொங்க விட்டதுவோ?
என நினைத்தேன்.

என் நெஞ்சக்
குளத்தின்
கரைகலெங்கும்
அவள் நினைவலைகள்
பரவலாக
மோதுகின்றன

பெண்ணே
இத்தனையும்
நிகழ்ந்தது வெறும்
கனவில் தான்

கனவில் வந்த
தேவதையே
நீ நனவில் வருவது
சாத்தியமா??
உன்னைத் தேடி
ஒரு இதயம்
அலைந்து திரியுது
பைத்தியமாய்.

இளநெஞ்சன்
ரமீஸ்

Wednesday, June 9, 2010

பொறாமையால் சீரழிந்த ஒரு ஹாஸ்டல் நட்பு.

ஆருயிர் நண்பனே
எனைக் குற்றுயிராய்
ஆக்கியதன் நோக்கம்
என்னவோ?

நாம் இங்கு
தனிமையில்
நடந்ததை விட
இருவரும்
கை கோர்த்து
வளம் வந்ததுதான்
அதிகம்

நம் நட்பைப்
பற்றி ஒவ்வொரு
கட்டிடத்துக்கும்,
மரங்களுக்கும்,
ஏன் செடிகளுக்கும்
கூடத் தெரிந்திருந்தது

நம் நட்பைக்
கண்ட
பறவைகள் கூட
எங்களை வாழ்த்திச்
சென்றன

இறைவனுக்காய்
நம் நட்பைப்
பரஸ்பரம் பகிந்து
கொண்டதால்
நம் நட்பு
தூய்மையானது

இதனால்
பல தடைகளையும்
தாண்டி
வெற்றி நடை
போட்டது
நம் நட்பு

இவ்வாறு
நம் நட்பை
பல ஆண்டுகள்
பரஸ்பரம் பகிர்ந்து
கொண்டோம்

பல வருடம்
தொடர்ந்த பின்னும்
பொறாமையின்
காரணத்தால்
சிதைந்துபோனது
சில நொடியில்

நம் நட்பு
தூய்மையானதால்
பிரிவென்ற சொல்
நமக்கு
நிரந்தரமில்லை

ஓஹ் என்
இனிய நண்பனே!
என் இதயத்தில்
புதைந்திருக்கும்
துக்கங்கள் நீங்கவே
ஒரு நிமிடம் என்னுடன்
மனம் விட்டுப் பேசடா

காலத்தால்
அழியாத
நம் நட்பின்
சுவடுகள்
என்றென்றும்
என் இதயத்தின்
அரியாசனத்தில்
அமர்ந்திருக்கும்.

இளநெஞ்சன்
ரமீஸ்

Tuesday, May 25, 2010

என் தேவதை



அன்பே
உன் போல் அழகு
இவ்வையகத்தில்
இல்லை
என் கண்களுக்கு

உனைக் கண்ட
மறுகணமே
அந்த நிலா
அழகில்லை
எனத் தோன்றியது

உன்
கருங்கூந்தல்
பார்த்தேன்
அன்று முதல்
நான் இரவின்
ரசிகன்

இரவானால்
உன் நினைவு
என் கண்களை
தட்டித் திறக்கிறது

மறு நாள்
காலையில்
தனிமைப்பட்டவனாய்
கண் விழிக்கிறேன்

ஒவ்வொரு
சூர்யோதயமும்
உன்னை நினைக்க
வைக்கிறது

தேனீக்கள்
உன் இதழ்களைச்
சுற்றி
வட்டமிடுகின்றன

காற்று
உன் ஜன்னலோடு
அளவிலாப்
பிரியம் கொண்டது

உன் பாதணியோ
உன்னை
சுமப்பதில்
பெருமைப்பட்டது

சூரியனோ
உன் வெளிச்சம்
தாங்காமல்
மேகத்துக்குள்
மறைந்து
கொண்டது

உன் கண்களைக்
கண்ட
நட்சத்திரங்களோ
இடைவிடாது
கண்ணடித்தன

உன் வட்ட
முகம் கண்ட
சந்திரனோ
தன் உறவுகள்
பூமியில் இருப்பதாய்
சந்தோசம் கொண்டது

உனை சுவாசித்த
காற்றோ
உன் வாசனையை
பூக்களுக்கு
பகிர்ந்தளித்தது

உன்
கன்னத்தில்
உள்ள
நீர்த்துளிகள்
மாதுளம்
பூவில் உள்ள
தேன் துளிகள்


நன்
தினமும்
மழையை
ரசிக்கிறேன்
ஏனென்றால் அது
உன் கார்மேகக்
கூந்தலில் இருந்து
சொட்டும்நீர்த் துளிகள்

உன் தரிசனத்தின்
பின் எனை
என் நண்பர்கள்
"ஆம்ஸ்ட்ரோங்"
என்றல்லவா
அழைக்கிறார்கள்.

என் கண்களுக்கு
விருந்தளிக்கும்
உன் கள்ளப்
பார்வையைக்
காணத் தினமும்
என் வாசலில்
தவம் கிடக்கிறேன்.

இளநெஞ்சன்
ரமீஸ்